ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: ஓட்டுப் போட்ட மக்களை விளாசி எடுத்த கமல்ஹாசன்!

தமிழகம்
Typography

சென்னை, ஜன.4- அண்மையில் நடைபெற்ற ஆ.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்ற நிலையில் அவரை ஓட்டுப் போட்டு வெற்றியடைய வைத்த மக்களை நடிகர் கமல்ஹாசன் விளாசி எடுத்தார்.

சில காலமாக தன் பட வேலையில் பிஸியாக இருந்த கமல் டிவிட்டரிலும் பத்திரிகைகளிலும் அதிகம் தலைக்காட்டாமல் இருந்தார். இந்நிலையில், வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், ஆர்.கே நகர் மக்கள் பணம் வாங்கி ஓட்டுப் போட்டதாக கூறி அவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கமல் தன் பேட்டியில், "ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்திற்கே ஏற்பட்டுள்ள மிகப் பெரிய களங்கம். இது ஊரறிய நடந்த குற்றம். இந்த குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது தான் மிக பெரிய சோகம். இது ஜனநாயகத்தின் வீழ்ச்சி" என்றும் கூறியுள்ளார்.

மேலும், "சென்னை வெள்ளத்தின்போது உங்களின் உதவிகள் எப்படிப்பட்டது என்று உலகுக்குக் காட்டினீர்கள். அப்படிப்பட்ட நீங்கள் இன்று ரூ.20 டோக்கனுக்கு விலை போய் இருப்பது பிச்சை எடுப்பதை விட கேவலமானது. அதிலும் திருடனிடம் பிச்சை எடுத்த கேவலம் எங்கேயாவது நடந்தது உண்டா?" என்றும் கமல் கடுமையாக விமர்சித்துள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS