திருவண்ணாமலை கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பக்தர்கள் அதிர்ச்சி!

தமிழகம்
Typography

சென்னை, ஜன.2- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று அந்த கோயிலின் இணை ஆணையருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு தீப திருவிழாவின்போது மலை மீது தீபம் ஏற்றுவது மிகவும் பிரபலம். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். மிகவும் பாரம்பரியமான இக்கோயிலின் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் என்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 

கோயில் இணை ஆணையர் ஜெகநாதனுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில் காஞ்சி சிறுத்தைகள் என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திருவண்ணாமலை போலீஸில் ஜெகநாதன் புகார் கொடுத்தார். இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS