நடிகர் பிரகாஷ்ராஜும் விரைவில் அரசியலில் பிரவேசமா?

தமிழகம்
Typography

சென்னை, ஜன.2- அண்மைய சில காலமாக அரசியல், சமூக விசயங்களுக்கு தொடர்ந்தார் போல் குரல் கொடுத்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னை நிர்பந்தம் செய்தால் தானும் அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார்.

பெங்களூர் பிரஸ் கிளப் சார்பில் பிரகாஷ்ராஜுக்கு சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு விருது பெற்றப்பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, என்னுடைய தோழி கவுரி லங்கேஷ்யின் கொலைக்குப் பிறகு தான் நான் சமூக அரசியல் விசயங்கள் குறித்து குரல் எழுப்பி வருகிறேன் என்றார்.

மேலும், "எனக்கு அரசியல் ஆசை கிடையாது. ஆனால் என்னை நிர்பந்தம் செய்தால் அரசியலுக்கு வரவும் தயங்க மாட்டேன்" என்று கூறினார்.

ரஜினி தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது குறித்து கேட்கையில் அதனைத் தாம் வரவேற்பதாகவும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலம், தொண்டர் பலமாக மாறும் எனவும் கூறினார். "ரஜினி அரசியலுக்கு வருவதை அவரது ரசிகர்கள் சந்தோஷமாக வரவேற்பதைப் போன்றே சக நடிகனாக நானும் வரவேற்கிறேன்" எனவும் பிரகாஷ்ராஜ் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS