'ரஜினியை எதிர்த்து போட்டியிடுவேன்!' -இயக்குநர் கௌதமன் அறிவிப்பு

தமிழகம்
Typography

 சென்னை, ஜன.1- ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்களுடனான சந்திப்பின் போது அறிவித்திருக்கும் நிலையில் அவரை எதிர்த்து வருடைய தொகுதியில் தாம் போட்டி போடத்தயாராக இருப்பதாக தமிழ்ப்பட இயக்குனர் கௌதமன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார். இது குறித்து இயக்குநர் கௌதமன் கூறுகையில், நினைத்து பார்க்க முடியாத துயரமான மனோநிலையில் தான். இந்த ஆண்டு தொடங்குகிறது. 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த தமிழினம் இன்று சொல்ல முடியாத அளவுக்கு உரிமையை இழந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நீர், நிலம், ஆறு, வளம் ஆகியவை மட்டுமல்லாமல் உயிரையும் உரிமையும் இழந்து வரும் நிலையில் மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள் உரிமையை காப்பாற்ற எங்கேயாவது இருந்து ஓர் உண்மையான தெளிவான பெரும் வெளிச்சம் தமிழ் இனத்தின் விடியலுக்கு ஏதாவது கிடைத்து விடாதா என்று தேடி வருகிறோம். 

இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு துக்கச் செய்தியை தமிழ் இனத்துக்கு புத்தாண்டு பரிசாக கொடுத்திருக்கிறார். தமிழர்களில் உயிர், உரிமைகள் பறிக்கப்படும் போது என்றாவது களத்தில் நின்று போராடியிருக்கிறாரா? இந்த நிலையில் ஆன்மீக அரசியலை அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்  மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.

விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்ட நிகழ்வுக்காகவே கத்திபாராவை இழுத்து பூட்டினோம் எங்கள் மண்ணை ஆக்கிரமிக்க அழித்தொழிக்க அபகரிக்க யார் வந்தாலும் நாங்கள் எதிராக நிற்போம். நீங்கள் போருன்னு சொல்லிட்டீங்க நாங்களும் தயார்.

வள்ளலாரின் ஆன்மிகத்தை தாண்டி எங்களுக்கு தெரியாத பாபாவின் ஆன்மிகம் எங்களுக்கு தேவையில்லை ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது ஆபத்தானது. அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அத்தொகுதியில் அவரை எதிர்த்து நான் நிற்பேன் என்றார் கௌதமன்.  

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS