ரஜினியின் தனிக் கட்சி பெயர் பொங்கல் தினத்தில் அறிவிப்பு!

தமிழகம்
Typography

சென்னை, ஜன.1- ரஜினிகாந்த்  தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயரை தைத் திருநாளான பொங்கல் திருநாளில் அறிவிப்பார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் 2 ஆவது முறையாக கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சந்த்தித்தார். அப்போது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவரோ, டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இதனால் நேற்றைய தினம் ஒட்டு மொத்த தமிழக மற்றும் ஆங்கில ஊடகங்கங்களும் ரஜினி என்ன அறிவிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தனிக்கட்சி தொடங்கப்போவதை அவர் அறிவித்தார்.

 ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், ''நான் அரசியலுக்கு வருவது உறுதி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை . சட்ட சபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.

இதையடுத்து அவர் கட்சியின் பெயர், கொடி குறித்த ஆர்வம் அதிகரித்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை அன்று அவர் கட்சி பெயர் குறித்து அறிவிப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. அது போல தமிழக மக்களுக்கு  தனது கட்சியின் பெயரை பொங்கல்  திருநாளன்று அறிவிக்க ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS