தனிக்கட்சி தொடங்கி தமிழகத் தேர்தலில் போட்டியிவேன்! ரஜினிகாந்த் பிரகடனம்!

தமிழகம்
Typography

சென்னை, டிசம்.31- அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா? என்று பல லட்சம் ரசிகர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாகவே நிலவி வந்த கேள்விக்கு பதிலாக, "தனிக் கட்சி தொடங்கி, அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிவேன்" என இன்று தமது ரசிகர்கள் முன்னிலையில் பகிரங்கப் பிரகடனம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஆறாவது நாளாக நடந்த ரசிகர்களுடனான சந்திப்புக்காக ரஜினிகாந்த் மண்டபத்திற்கு வந்து சேர்ந்த போது  அவருக்கு மாபெரும் வரவேற்பை நல்கினர். உரிய பாதுகாப்பு ஏற்பாட்டிற்கு இடையே மண்டபம் நிரம்பி வழிந்த நிலையில், திரண்டிருந்நத தம்முடைய ரசிகர்கள் முன்னிலையில் ரஜினி உரையாற்றினார்.

அவர் கூறியதாவது: 

ரசிகர்கள் இந்த அளவுக்கு கட்டுப்பாடோடு  இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருந்தால் நாம் எதையும் சாதித்து விடலாம்.

நான் அரசியலுக்கு வருவது குறித்து எனக்குப் பயம் இல்லை. இந்த மீடியாக்காரர்களைக் கண்டால் தான் பயம்.  நான் எதையாவது சொல்ல அவர்கள் அதை விவாதமாக்கி விடுகிறார்கள். 

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி, ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு கால அவகாசம் இலலததால் போட்டியிடவில்லை. நான் பணம், பெயர், புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை.  கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆயிரம் மடங்கு அதை மக்கள்  எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அரசியல் கெட்டுப் போய்விட்டது.  ஜனநாயகம் சீர் கெட்டுப் போய் விட்டது.  எல்லாவற்றையும் மாற்றவேண்டும். இவ்வாறு ரஜினிகாந்த் அறிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS