ஹார்வார்டு பல்கலை. தமிழ் இருக்கைகாக ரூ.20 லட்சம் வழங்கினார் கமல்ஹாசன்!

தமிழகம்
Typography

சென்னை, நவ.16- நடிகர் கமல்ஹாசன் இன்று ரூ 20 லட்சத்தை ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு வழங்குவதாக அறிவித்தார்.

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழ் சினிமாவிலிருந்து கிட்டத்தட்ட ரூ 55 லட்சத்துக்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளனர் நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று ஒரு துறையை உருவாக்கி, மாணவர்களின் ஆய்வுக்கு உதவ வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

இதற்காக கடந்த ஆண்டிலிருந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் திரட்டினர். 

இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான், நா.முத்துக்குமார், சூர்யா, விஷால் மற்றும் கருணாஸ் ஆகியோரும் ரூ.55 லட்சம் வரை வழங்கியுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS