விஷால் அலுவலக ரெய்டு: கட்டுக்காட்டாய் பண நோட்டுக்கள்! -கசிந்ததா வீடியோ? -(VIDEO)

தமிழகம்
Typography

 சென்னை, நவ.16- ஓர் அறை முழுக்க கட்டுக் கட்டாய் 2,000 ரூபாய் நோட்டுக்கள். ஒருபுறம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க, மறுபுறம் குவிந்து கிடக்கும் பணக் கட்டுக்களின் முன்னால் பதட்டத்துடன் நிற்கிறார் நடிகர் விஷால்.

"சார், விடுங்க சார்.., இதெல்லாம் என் பணம்.., போங்க சார்.., என்று விஷால் சொல்லுகிறார். ஆனால், பணக் குவியலைப் பார்த்து திகைத்துப் போன அதிகாரிகள், ''என்ன சார்.., எப்படி இவ்வளவு பணம் வந்துச்சு, கடன் வாங்கினதா சொல்றீங்க.., இவ்வளவு பணம் இருக்கே, இதுக்கு என்ன ஆதாரம்  சார்...'' என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்கின்றனர்.

''எல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் சார்.., விடுங்க..'' என்கிறார் விஷால்.

இதுவரைக்கும் கூட அண்மையில் நடிகர் விஷால் அலுவலகத்தில் வருமான அதிகாரிகள் புகுந்து நடத்திய ரெய்டு பற்றி வீடியோ தான் அமபலமாகி விட்டதோ என்று நினைத்திருப்பீர்கள்.

ஆனால், திடுதிப்பென உள்ளே நுழைந்த நடிகர் அர்ஜுன், "பணமா, உள்ளே, நல்லா பாருங்கய்யா.. அதனையும் வெள்ளைப் பேப்பர்.., ரெய்டுமில்ல ஒன்னுமில்ல.. ஷூட்டிங் டைம்லா கிளம்புங்க..'' என்று குரல் கொடுக்கிறார் சிரித்தபடியே.

'இரும்புத் திரை' படத்தின் ஷூட்டிங்கிற்கு நடுவில் திட்டமிட்டு எடுக்கப்பட்ட 'டுபாக்கூர்' வீடியோ தான் இது என்பது பின்னரே தெரிய வந்தது தன்னுடைய அலுவலகத்தில் நடந்த வருமான வரி ரெய்டை வைத்து விஷாலே எழுதிய ஸ்கிரிப்டுதான் இதுவாம். 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS