“நந்தி” விருது: ரஜினி-கமல் மாறி மாறி வாழ்த்து!.

தமிழகம்
Typography

சென்னை, நவ,15- நந்தி விருது வழங்கிய ஆந்திர அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நந்தி விருதுக்காக வாழ்த்திய கமல்ஹாசனுக்கும் ரஜினி நன்றி கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வெளியாகும் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து ஆந்திர அரசு 'நந்தி விருதுகள்' வழங்கி வருகிறது. 

அத்துடன், 'என்.டி.ஆர். தேசிய விருது', உள்ளிட்ட சில சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது. 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. ‘என்.டி.ஆர். தேசிய விருது’ 2014-ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016-ஆம் ஆண்டு ரஜினிகாந்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையொட்டி டுவிட்டரில் ரஜினிகாந்துக்கு கமல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு விருது வழங்கியதற்காக நன்றியும், மகிழ்ச்சியும் வெளிப்படுத்தியுள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS