கமல், ரஜினி அரசியலுக்கு தகுதியானவர்கள் அல்ல- பிரகாஷ் ராஜ் சாடல்...

தமிழகம்
Typography

பெங்களூர், நவ.13- நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருவதற்கான பணிகளை செய்து வருகின்றனர். 

இவர்களின் இந்த முடிவுக்கு பெரும்பாலான நடிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பிரகாஷ்ராஜ் கூறியதாவது: 

நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது. திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும். நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரப்போவதில்லை. நடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக்கூடாது. இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். 

விவசாயிகள் பிரச்சினை, பெங்களூர் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு, தாஜ்மகால் புராதன சின்னங்களிலிருந்து நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார் பிரகாஷ் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.. 

BLOG COMMENTS POWERED BY DISQUS