தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகம்
Typography

சென்னை, நவ.12- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மைய பகுதி அதே இடத்தில் நிலவி வருவதால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தெற்கு சுந்திரா கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS