இணையத்தில் அனுயாவின் ஆபாசப்படம்: நீக்கக் கோரி போலீசில் புகார்! 

தமிழகம்
Typography

 

சென்னை, நவ.9- பிரபல நடிகை அனுயாவின் ஆபாசப் படம் என குறிப்புடன் ஒரு படத்தை டுவிட்டரில் பரவ விட்டுள்ளனர். இதனை நீக்கக் கோரி அனுயா சைபர் குற்றத் துறையிடம் புகார் செய்துள்ளார்.

 நடிகைகளின் ஆபாச, நிர்வாணப் படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்புவது வழக்கம். இவற்றில் சில உண்மையாக இருக்கும். பல வெட்டி ஒட்டி செய்யப்பட்டவையாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு 'சுசி லீக்ஸ்' என்ற பெயரில் நடிகை சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரது ஆபாசப் படங்கள் வெளியாகி, பின் நீக்கப்பட்டன. 

'சிவா மனசுல சக்தி', 'நண்பன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்கள், மற்றும் அண்மையில் பிக்பாஸில் இடம்பெற்ற நடிகை அனுயாவின் வெட்டி ஒட்டும் கணினி தொழில் நுட்பத்தில் உருவான ஆபாச படமும் பரவியது. இந்தப் படத்தை டுவிட்டரில் இருந்து நீக்குமாறு சைபர் குற்றபத் தடுப்புப் போலீசில் அனுயா புகார் மனு அளித்துள்ளார். 

இது குறித்து நடிகை அனுயா, "சமூகவலை தளத்தில் வெட்டி ஒட்டப்பட்ட  எனது ஆபாசப் படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, அந்தப் ஆபாச படத்தை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்," என அந்தப் புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS