தாடி பாலாஜியின் கேடித் தனத்தை அம்பலப்படுத்திய மகள் போஷிகா!

தமிழகம்
Typography

 

சென்னை, அக்.16- 'தயவு செய்து குடிப்பதை நிறுத்திவிடுங்கள், அது உங்கள் உடல்நலத்திற்கு தீங்கினை ஏற்படுத்தும்'' என நடிகர் தாடி பாலாஜியின் மகள் போஷிகா தெரிவித்துள்ளார். 

தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்தியாவுக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையில், தனது மனைவி மற்றும் மகளைத் தீயீட்டு எரித்து கொலை செய்ய முயற்சித்தாக அண்மையில் வீடியோ ஒன்றினை நித்யா வெளியிட்டார்.

அதுமட்டுமின்றி என்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்பி தொந்தரவு செய்தால் நானும் எனது குழந்தையும் தற்கொலை செய்துகொள்வோம்ரென்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தாடி பாலாஜியின் மகள் போஷிகா கூறியதாவது: 

எனக்கு சந்தோஷம் இருக்க வேண்டும், சோகமாக இருப்பது பிடிக்காது. வெளியில் மட்டுமே பாசம் காட்டாமல், வீட்டுக்குள்ளேயும் எனக்கு பாசம் காட்ட வேண்டும். அம்மா என்னிடம் எப்போதும் ஒரே மாதிரி நடந்துகொள்வார். 

ஆனால், அப்பா மாறி மாறி நடந்துகொள்வார். இரவு நேரத்தில் குடித்துவிட்டு எனது அம்மாவையும், என்னையும் அடிப்பார். இனிமேல் உனக்கு அம்மா கிடையாது, அப்பா மட்டும்தான் என்று என்னிடம் பலமுறை கூறியுள்ளார்.

வெளிப்பார்வைக்கு தான் அவர் 'காமெடி' செய்கிறார், அதை மக்கள் ரசிக்கிறார்கள். ஆனால், வீட்டுக்குள் இருப்பதுதான் அவரது உண்மையான முகம். அது எனக்கும் எனது அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும். குடித்துவிட்டு வந்து என்னை மிரட்டும் எனது அப்பா எனக்கு வேண்டாம் என மகள் போஷிகா கூறியுள்ளார். 

சிறுமி போஷிகா பேசும் வீடியோ நேற்று முன்தினம் யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால், தற்பொழுது சம்பந்தப்பட்ட வீடியோ திடீரென்று நீக்கப்பட்டுள்ளது.        

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS