முதல்வர் எடப்பாடியுடன்  நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!

தமிழகம்
Typography

 

சென்னை, அக்.16- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் திடீரென இன்று சந்தித்து பேசினார். நடிகர் விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் பல்வேறு தடைகளை எதிர்கொண்டிருக்கிறது. 

நீதிமன்றங்களும் மெர்சல் படத்துக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் கேளிக்கை வரி தொடர்பாகவும் திரைத்துறையினர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் இன்று சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.  

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS