நானும் மகளும் தற்கொலை செய்வோம்!-  -தாடி பாலாஜி மனைவி மிரட்டல்

தமிழகம்
Typography

 சென்னை, அக்.14- தொடர்ந்து எனக்கு வெவ்வேறு நபர்கள் மூலம் மிரட்டல்கள் வருகின்றன. பாலாஜி தொடர்ந்து என் மீது அவதூறு பரப்பி வருகிறார். நானும் என் மகளும் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார். 

காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளனர். 

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நித்யா, தனது கணவர் தாடி பாலாஜி மீது அடுக்கடுக்காக புகார்களைத் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவுக்கும், எனக்கும், போலீஸ்காரர் மனோஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

அது 'டப்பிங்' செய்யப்பட்டது. நவீன் என்பவர் எனக்கு உதவுபவர் போல் நடித்து, கடைசியில் பாலாஜிக்கு உதவி செய்து என்னை ஏமாற்றிவிட்டார். எனது மகளை என்னிடம் இருந்து பிரித்து சென்றுவிட்டால், நான் அவருடன் சென்றுவிடுவேன் என்று எண்ணி அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார் பாலாஜி.

நான் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்த பிறகும் அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஒன்றும் செய்யாத என்னை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று இரவு 11.30 மணி வரை போலீஸ் நிலையத்தில் காத்திருக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். 

வில்லிவாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், நான் வீடியோ வெளியிடக்கூடாது, பத்திரக்கையாளர்களைச் சந்திக்கக் கூடாது என என்னை மிரட்டுகிறார். எல்லாம் பாலாஜியின் வேலை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழி தெரியவில்லை," என்று கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS