நடிகை கனகாவின் கதியென்ன?  வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!.

தமிழகம்
Typography

 

சென்னை, அக்.14- 'கரகாட்டக்காரன்' உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை கனகா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று வெளியாகி வரும் அடுக்கடுக்கான வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்தார்.

முன்னாள் பிரபல நடிகை தேவிகாவின் மகளே நடிகை கனகா என்பது குறிப்பிடத்தக்கது. தனது அசத்தலான நடிப்பின் மூலம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். 

தன்னுடைய அம்மா இருந்தவரை எந்தவொரு கவலையும் இல்லாமல் இருந்தார். இவரது அப்பா சிறுவயதிலேயே இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதால் இவரை மிகவும் செல்லமாக வளர்த்தார் இவரது தாயார்.

இந்நிலையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மனநிலைப் பாதிப்புக்கும் உள்ளாகி இருப்பதாகவும் அண்மையில் இவர் இறந்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  அவர் புற்றுநோய் தொடர்பில் சிறிதுகாலமாகவே சிகிச்சை பெற்றுவருகிறார் எனத் தெரிய வந்துள்ளது.

இதனிடையே தன்னைப் பற்றிய சில வதந்திகளுக்கு காரணம் தம்முடைய தந்தையே என நடிகை கனகா குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக ஓடிப்போன தன்னுடைய தந்தைக்கு எதிராக அவர் வழக்கும் தொடர்ந்துள்ளார். வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதாக அவர் சொன்னார். 

சுமார் 40 வயதாகும் இவர்,  தனது தனிமையை தவிர்க்க செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறார்.

இந்தச் செல்லப் பிராணிகள் சில மனிதர்கள் போன்று வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்புவதில்லை. மிகவும் நன்றியுணர்வோடு இருக்கின்றன என்கிறார் நடிகை கனகா.  

BLOG COMMENTS POWERED BY DISQUS