தமிழக சட்டசபையில் நம்பிக்கை  வாக்கெடுப்புக்குத் தடை நீட்டிப்பு!

தமிழகம்
Typography

சென்னை, செப்.20- தமிழக சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற உத்தரவு, மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி தீர்ப்பளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று (20-ஆம் தேதி) வரையில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, மறு உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.

தகுதி நீக்க உத்தரவு தங்களுக்கு நேரில் தரப்படவில்லை. பதிலளிக்க அவகாசம் தரப்படவில்லை. தங்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அரசைக் காப்பாற்ற சபாநாயகர் முயல்கிறார் என்று 18 பேரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். இதை கேட்டறிந்த பிறகு நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 2 வாரங்களுக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறப் போவதில்லை. இதனால் ஆட்சிக்கு 2 வார காலத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS