மாணவிகள் பலாத்காரம்: மதுரை வாத்தியாருக்கு  55 ஆண்டு சிறை!

தமிழகம்
Typography

 

மதுரை, செப் 20- மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக மதுரையிலுள்ள பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது மதுரை நீதிமன்றம்.

மதுரை பொதும்பு அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆரோக்கியசாமி. இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு அந்தப் பள்ளியில் படித்த 90-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்துள்ளதாக கூறப்பட்டது.

இருப்பினும், தங்களைப் பலாத்காரம் செய்ததாக 24 மாணவிகளின் பெற்றோர்களும், மாதர் சங்கமும் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் சமூக நீதி, மனித உரிமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம், பாலியல் தொல்லைக் கொடுத்த ஆரோக்கியசாமிக்கு 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட 24 மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் ஆரோக்கியசாமிக்கு உத்தரவிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS