தமிழக ஆசிரியர்களின் போராட்டம்; சம்பளம் வழங்கப்படாது- உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழகம்
Typography

சென்னை, செப்.14- ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தை நிறுத்தி கொள்ளவேண்டும் என உயர்நீதிமன்றம் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மாணவர்களின் படிப்பு வீணாகுவதாக கூறி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், போராட்டம் தொடர்பாக 12 கேள்விகளை எழுப்பி அரசு அதற்கு விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதற்கு பள்ளி கல்வி இயக்குநரகம் அளித்த விளக்கத்தில், போராட்டத்தில் மொத்தம் 33,487 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பள்ளி செல்லவில்லை. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது, அல்லது பிடித்தம் செய்யப்படும் என கூறியுள்ளது. 

இத்தனை நாள்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விடுப்புகள் அங்கீகரிக்கப்படாத விடுமுறை நாட்களாக கருதப்படும். இதுவரை மொத்தம் 43,508 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது எனவும் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS