கமலின் அதிரடி ஆரம்பம்! இம்மாத  இறுதிக்குள் தனிக் கட்சி?

தமிழகம்
Typography

 

சென்னை, செப்.14- இந்த மாத இறுதிக்குள் நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் நிலவுவதாக கமல்ஹாசன் நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுவதாகவும், எனவே, தனிக்கட்சி தொடங்குவது குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"அரசியல் கட்சியைத் தொடங்கும் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். விஜயதசமி நாளில் அதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியை முழுமையாக பலபடுத்த அவர் திட்டமிட்டுள்ளார்" என்று கமலின் நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகளால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கமல் நம்புகிறார். தனது முடிவு குறித்து இன்னும் நற்பணி மன்ற நிர்வாக தலைவர்களுக்கு கமல் தெரிவிக்கவில்லை. 

BLOG COMMENTS POWERED BY DISQUS