இளசுகளை உருக வைத்த 'ஜிமிக்கி கம்மல்' புகழ் ஷெரில், கல்லூரி விரிவுரையாளராம்..!!

தமிழகம்
Typography

சென்னை, செப்.13- ஜிமிக்கி கம்மல் என்ற மலையாள பாட்டுக்கு இளம் பெண்கள் சேர்ந்து போட்ட ஆட்டம் சில நாட்களுக்கு முன் இந்தியா தாண்டி உலகம் முழுதும் பிரபலமானது. அதில் ஆடியவர்கள் எல்லோரும் மாணவிகள் என்று கருதிய நிலையில், முன் நின்று ஆடிய இருவரும் கல்லூரி விரிவுரையாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

எந்த பாட்டு, எந்த காணொளி எந்த நேரத்தில் எப்படி வைரலாகும் என்று யாருக்குமே தெரியாது. சாதாரண காணொளி என்று எண்ணும் நேரத்தில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விடுவதும் உண்டு.

அப்படி அண்மையில் வைரலான காணொளி தான் 'ஜிமிக்கி கம்மல்' என்ற பாடல். மோகன்லால் பட பாடலான இதற்கு 20 பேர் அடங்கிய பெண்கள் குழு நடமாடினர். இதற்கு கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வரவேற்பு இருந்தது. அதிலும் முன் நின்று ஆடிய இரு அழகிய பெண்கள் அனைவரையும் கவர்ந்தனர். அவர்களில் ஒருவரின் பெயர் ஷெரில்.

இவர்களைப் பற்றி கண்டுப்பிடித்து விசாரித்த சென்னையைச் சேர்ந்த வானொலி ஒன்று, அவர்கள் இருவரும் கல்லூரியின் விரிவுரையாளர்கள் என்று கூறியுள்ளது. 'மிர்ச்சி' வானொலி எடுத்த பிரத்தியேக நேர்காணலில் இருவரும் கடந்த ஜனவரி முதல் விரிவுரையாளராக பணியாற்றுவதாக கூறினர்.

பல கேள்விகளுக்கு இடையில், தொகுப்பாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு தமிழ்நாட்டு பெண்கள் இன்னும் அழகானவர்கள் என்றும் அவர்கள் கூறினர்.

கல்லூரி மாணவர்கள் என்று நினைத்த பலருக்கு இவர்கள் விரிவுரையாளர்கள் என்று சொன்னதும் 'பிரேமம்' படத்தில் நடித்த மலர் டீச்சர் ஞாபகம் தான் வந்ததாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS