சசிகலா- தினகரன் பதவிகள் பறிப்பு! அதிமுக பொதுக் குழு அதிரடி முடிவு!

தமிழகம்
Typography

 சென்னை, செப்.12- அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா அப்பதவியை 9 மாதத்திலேயே இழந்துவிட்டார். பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக பொதுக் குழு கூட்டம் கூடியது. இதில் சசிகலா, தினகரன் நீக்கம் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

டிடிவி தினகரன் சார்பில் இந்த பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் திட்டமிட்டபடி பொதுக் குழு கூட்டம் கூடியது. 

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் ஒவ்வொரு தீர்மானமாக வாசிக்கப்பட்ட நிலையில் பொதுச் செயலாளராக சசிகலாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9 மாதங்களுக்கு முன்புதான் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் சசிகலா. ஜெயலலிதா மறைந்ததும் இவரை தற்காலிகமாக பொதுச் செயலாளர் பதவியில் அமர வைத்தனர். 

ஆனால்,  அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்புகளுக்கு இடையில் தற்போது அந்தப் பதவியை இழந்துள்ளார் சசிகலா. அடுத்து என்ன நடக்கும், சசிகலா தரப்பு என்ன செய்யப் போகிறது என்பது எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS