அனிதா குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!

தமிழகம்
Typography

சென்னை, செப்.11- மருத்துவக் கனவு நிறைவேறாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா வீட்டிற்கு நடிகர் விஜய் வருகை புரிந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அனிதாவின் மரணத்தையடுத்து தமிழகம் முழுவதும் 'நீட்' தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் விஜய் அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது அப்பா, அம்மா மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS