சென்னையில் ரயில் தடம் புரண்டது; எழும்பூர் ரயில் நிலையத்தில் சம்பவம்!

தமிழகம்
Typography

சென்னை, செப்.11- எழும்பூர் ரயில் நிலையத்தில் முதல் நடைபாதை அருகில் ரயில் இயந்திரப் பகுதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக இவ்விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை.

இந்தியாவில் ரயில் தடம் புரளும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக உத்திரபிரதேசத்தில் ரயில்கள் தடம் புரண்டு உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையம் அருகே ரயிலின் முன் இயந்திர பகுதி தடம் புரண்டது. ஒன்றாவது நடைபாதை அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்வே பணியாளர்கள் இயந்திரப் பகுதியை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் செங்கோட்டை செல்லும் ரயில் தாமதமாக செல்லும் என செய்திகள் கூறுகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS