10 வயது சிறுவனையும் விட்டு வைக்காத 'புளுவேல்'; கையில் திமிங்கல அச்சு!

தமிழகம்
Typography

சென்னை, செப்.8- மரணத்தை விலை கொடுத்து அழைக்கும் விளையாட்டாக மாறிவிட்ட புளுவேல் கேம் இந்தியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவனையும் விட்டு வைக்க வில்லை. கையில் ரத்தக் காயத்துடன் திமிலங்கத்தின் அச்சு இருந்ததைக் கண்ட பெற்றோர் உடனடியாக அவனை மீட்டனர்.

இந்த அதிநவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் புளு வேல் என்ற இணைய விளையாட்டு ஒன்று பல நாடுகளை உலுக்கி எடுக்கிறது. அதுவும் நாட்டு முதுகெலும்பாக இருக்கும் இளைஞர்களையே குறிவைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுளை விழுங்கும், புளு வேல் விளையாட்டு தற்போது இந்தியாவிலும் தஞ்சம் புகுந்துள்ளது அறிந்ததொன்று. தற்போது தமிழகத்திலும் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் புளு வேல் கேம்மை விளையாடிய 5ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவன் திருச்சியில் மீட்கப்பட்டான். திருச்சி-பாலக்கரையை சேர்ந்த அந்த சிறுவனின் கையில் புளு வேல் படமும், காலில் பாம்பு படமும் இருந்ததை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடூர விளையாட்டிலிருந்து அச்சிறுவனை விடுவிக்க கவுன்சிலிங் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS