கோவை பேருந்து நிலைய கூரை இடிந்து விழந்தது; 5 பேர் பரிதாபமாக பலி!

தமிழகம்
Typography

சென்னை, செப்.7- கோவை மாவட்டத்தில் உள்ள சோமனூர் அருகே பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்ததில் அங்கு நின்றுக் கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் பலத்த காயங்களுக்கு ஆளானதாக கூறப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பலர் காத்திருந்தவேளை, இந்த அசம்பாவிதம் நடந்தது. திடீரென கூரை இடிந்ததால் இடுபாடுகளில் சிக்கியவர்கள் வெளியே வர முடியாமல் திணறி இறந்தனர். இடுபாடுகளில் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. 

சம்பவத்தின் போது அதிகமானோர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்ததாகவும் அவர்களின் முழு விவரம் தெரியாததாலும் மீட்பு பணி நடந்து கொண்டிருப்பதாலும் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS