பிக்பாஸ்: வெளியேற்றப்பட்டார் நடிகை ஆர்த்தி  

தமிழகம்
Typography

சென்னை, ஜூலை.17- விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் பலகோடி ரூபாய் செலவில் தமிழில்  ஒளிப்பரப்பாகிவருகிறது. இதில் 15 நடிகர் நடிகைகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி விதிகளின் படி, ஒவ்வொரு வாரமும் சக போட்டியாளர்களால் ‘நாமினேட்’ செய்யப்படும் நபர்கள் மக்களின் வாக்குகளை பொறுத்து நிகழ்ச்சியில் நீடிக்கின்றனர். ஒருவர் மட்டும் வெளியேற்றப்படுவார்.

அந்தவகையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  வெளியேறுவார் என்ற கேள்வியே மக்கள் மத்தியில் பெரிய விவாதமாக போய்கொண்டிருக்கிறது.

இதுவரை நடிகை அனுயா, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீ உடல்நிலைக் குறைவால் வெளியேறினார். நடிகர் பரணி பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சரால் வெளியேறினார்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ஓவியா, வையாபுரி மற்றும்  ஆர்த்தி இவர்களில் யார் வெளியார போகிறார் என்ற கேள்வியே மக்கள் எல்லோர் மனதிலும் இருந்த நிலையில், நேற்று அதிரடியாக மக்கள் அளித்த ஓட்டுகளின் அடிப்படையில் ‘நடிகை ஆர்த்தி’ வெளியேற்றப்பட்டார்.

ஆரம்பம் முதலே அடாவடியாக பேசிவந்த நடிகை ஆர்த்தி, வெளியேற்றப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதுபோலவே அவருக்கான மக்களின் வாக்கும் மிக குறைந்தளவில் இருந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.

அதேநேரத்தில் கடந்த 2 வாரங்களாக சக குடும்பத்தினரால் ‘நாமினேட்’ செய்யப்பட்ட நடிகை ஓவியா, மக்களின் மனங்களை கொள்ளை கொண்டு  அதிக வாக்குகளை குவித்து தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் தங்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS