அருகதை அற்றவரா நடிகர் கமல்? அமைச்சர் மிரட்டல்! ஸ்டாலின் கண்டனம்   

தமிழகம்
Typography

 சென்னை, ஜூலை.17- தமிழக அரசை நடிகர் கமலஹாசன் விமர்சித்த விவகாரத்தில், அவருக்கு அமைச்சர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து எழுந்த சர்ச்சைக்கு கமல் செய்தியாளர்களை சந்தித்தபோது, இங்கு அனைத்துத் துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் இருக்கத்தான் செய்கிறது ‘குளிர்பானங்களுக்கு அளிக்கப்படும் மரியாதை கூட சினிமாவிற்கு வழங்கப்படவில்லை’ என்பது வருத்தம் அளிக்கிறது என்று கூறியிருந்தார்.

மேலும் இங்கு, 'சிஸ்டம்' சரியில்லை என்று ரஜினி கூறிய கருத்தில் எந்த தவறு இல்லை, இது நான் ஏற்கனவே சொன்ன கருத்துதான் என்றும் அவர் கூறினர்.

மேலும் நடிகை பாலியல் தொடர்பான வழக்கு பற்றி கருத்து சொல்லும்போது நடிகை பெயரை கூறியதுக்கு கண்டனங்கள் எழுந்தது. அதற்கு நான் பெண்களை மதிப்பவன், பெண்களின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன் நான் எனவும் கூறி இருந்தார்.  

இந்நிலையில், அரசை விமர்சித்த கமலுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் பதிலளித்தார். அதில், நடிகர் கமலஹாசன் இன்று படவாய்ப்புகள் இல்லாத நடிகராகிவிட்டார். பணம் அவருக்கு பிரதானம் ஆகிவிட்டது. பெண்களைப்பற்றி அவர் உயர்வாக பேசத் தகுதி இல்லாதவர். என்று சாடினார்.

ஏனெனில், தமிழ்க் கலாச்சாரத்திற்கு விரோதமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார். அவர் எங்கள் அரசை பற்றியும், இந்த நாட்டு மக்களைப் பற்றியும் பேச அருகதையற்றவர். மேலும் கமலஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு தொடர வேண்டும் எனக் கூறினர்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பற்றிய உண்மையை எடுத்து கூறினால்  அமைச்சர்கள் மிரட்டுவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதையும், பீகாரை விட தமிழகம் லஞ்சம் ஊழலில் மோசமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்திருந்தார். மக்களின் உணர்வைத்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். 

அதற்காக அவரைப் பற்றி கீழ்த்தரமாக தமிழக அமைச்சர்கள் கருத்து கூறி வருகிறார்கள். சட்டத்தைக் காட்டி மிரட்டிப் பார்க்கிறார்கள். 

இப்படி மிரட்டுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும் என கூறி இந்த மிரட்டலுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS