சிறையை விட்டு வெளியே சென்று வர சசிகலா இரகசியமாக ஏற்பாடா?

தமிழகம்
Typography

 பெங்ளூர், ஜூலை.15 சிறையில் இருக்கும் சசிகலா அவ்வபோது இரகசியமாக காரில் வெளியே சென்று வந்ததாக சிறை அதிகாரி ஒருவர் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பிப்ரவரி முதல் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூர் பரபப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் இதற்காக அவரிடம் இருந்து ரூ.2 கோடி வரை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.சத்திய நாராயணா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபாவிற்கு, பெயர் குறிப்பிடாமல் ஒரு கடிதம் வந்தது. அதில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் போதைப்பொருள் நடமாட்டம் பற்றியும். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி., ஐ.ஜி., சிறைச்சாலையில் இருக்கும் அதிகாரி, சிறைக் கண்காணிப்பாளர், சிறை மருத்துவர், சிறை காவலாளிகள் ஆகியோருக்கு கடந்த 5 மாதங்களாக கை நிறைய பணம் கொடுக்கப்பட்டது என்று எழுதப்பட்டு இருந்தது.

மேலும், இதில் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு மட்டுமே ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், சிறைத்துறை உயர் அதிகாரியின் காரில் சிறையில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு 3முறை சசிகலா சென்று வந்துள்ளார்

என உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கடித்தத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தக் கடித்தின் அடிப்படையிலேயே ரூபா அனைத்துத் தகவல்களையும் திரட்டி ஆதாரங்களுடன் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த பிரச்னை அனைத்து ‘மீடியா’க்களிலும் பூதாகரமானது. அதனை தொடர்ந்து, கர்நாடக அரசு இது பற்றிய அறிக்கையை கொடுக்குமாறு விசாரணை’க்கு ஆணையிட்டுள்ளது.  

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS