அழுவதா, சிரிப்பதான்னே.. தெரியலே - ஸ்ரீதேவியின் கணவர்  வேதனை

India
Typography

மும்பை,ஏப் 16- மறைந்த ஶ்ரீதேவிக்கு  தேசிய விருது. இந்த நேரத்தில்  அழுவதா,  சிரிப்பதா? என்றே தெரியவில்லை என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தெரிவித்tதார்.

65 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மறைந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவர் கடைசியாக நடித்த'மாம்' (MOM)படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கூறியதாவது: ஒரு குடும்பமாக இந்த நல்ல விஷயத்தை கொண்டாடுவதா, வேண்டாமா? என்று தெரியவில்லை. இதைக் கேட்டு மகிழ்ச்சியில் சிரிப்பதா, இல்லை அழுவதா? என்று சத்தியமாக  புரியவில்லை.

இந்த தேசிய விருது அவர் இறந்த பிறகு கிடைத்துள்ளது. ஆனால் இதை நாங்கள் உயிருள்ள வரைக்கும் மறக்க மாட்டோம். அவர் தான் நடித்த 300க்கும் மேற்பட்ட படங்களில் சிறப்பாக நடித்தவர். அவரின் புகழ் என்றும் மறையாது என்று தெரிவித்துள்ளார் போனி கபூர்.

ஸ்ரீ, தற்போது நம்மிடையே இல்லை. ஆனால் அவரின் படங்கள் நினைவு என்றுமே நம்முடன் இருக்கும். இந்த விருது ஸ்ரீக்கு பெரிய விஷயம். எங்களுக்கும் தான். நன்றி என்று போனி கபூரின் தம்பியும் நடிகருமான அனில் கபூர் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி இறந்து விட்டதால் அவருக்கு இந்த விருதை அளிக்கக்கூடாது என்று தேர்வுக் குழுவிடம் தெரிவித்ததாக தேசிய விருது தேர்வுக் குழு தலைவர் சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS