ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2  விருதுகள்! ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது

India
Typography

புதுடில்லி, ஏப் 13- இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. 65ஆவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப் பட்டுள்ளன.   'மாம்' (MOM)படத்தில் நடித்ததற்காக மறைந்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான  விருது கிடைத்துள்ளது. 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹமானுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படப் பாடல்களுக்காவும் 'மாம்' படத்தின் பின்னணி இசைக்காகவும் ரஹ்மானுக்கு விருது வழங்கப்படுகிறது.

காற்றி வெளியிடை படத்தில் வந்த வான் வருவான் பாடலை பாடியதற்காக ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பாடகிக்கான விருது கிடைத்துள்ளது. 

இந்திய சினிமாவில் அதிக வசூல் சாதனை புரிந்த ராஜமவுளி இயக்கிய பாகுபலி 2 படத்திற்கு   3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS