எழுந்து நின்று பாடாததால் மேடையில் கர்ப்பிணி பாடகி சுட்டுக் கொலை!

India
Typography

கராச்சி. ஏப் 12-  இசைக்கச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி, சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்  பாகிஸ்தானில்   பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில், சிந்து மாநிலத்தில் உள்ள வர்கானா பகுதியில் இசைக்கச்சேரி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அதில் பாடகி சமீனா (வயது 24) என்பவர் பாடல் பாடிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர்கள் மத்தியில் இருந்த தரிக் அகமது ஜடோய் என்பவர் சமோனை எழுந்து நின்று பாடுமாறு கூறியுள்ளார்.

ஆனால் தான் கர்ப்பிணி என்பதால் நின்று கொண்டு பாட முடியாது  என அவர்  மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தரிக் அகமது தன்னிடம் இருந்த துப்பாக்கியினை  எடுத்து சரமாரியாக  சுட்டார். இதில் குண்டுகள் துளைத்த நிலையில் பாடகி சமோன் படுகாயம் அடைந்து வீழே விழுந்தார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு  அவரை பரிசோதனை மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இது குறித்து  அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தரிக் அகமதுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இசைக் கச்சேரி நிகழ்ச்சியில் எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகி  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே   அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.

BLOG COMMENTS POWERED BY DISQUS