பாஜகவுக்காக  நாடகமாடுகிறார் ரஜினி!   -தமிமுன் குற்றச்சாட்டு

India
Typography

சென்னை, ஏப்ரல்.12- ரஜினியின் டுவிட்டர் பதிவுக்கு, தமிமுன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

இதற்கிடையே ஐபிஎல்  கிரிக்கெட்  போட்டியை சென்னையில் நடத்துவது  தமிழ் இளைஞர்களை  திசை திருப்பும் என்று கூறி, சென்னையில் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்

அப்போது போராட்டக்காரர்களை போலீசாரும்- போலீசாரை போராட்டக்காரர்களும் தாக்கும்  சம்பவங்கள் அரங்கேறின.

"வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில்  பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து . சீருடையில் இருக்கும் காவலர்களை மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்" . இதில் போலீசாரை தாக்கும் வீடியோவை பதிவிட்டு ரஜினிகாந்த கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழர்களை உரிமை போராட்டத்தை ரஜினி திசை திருப்பலாமா? பாஜகாவின் ஊதுகுழலாக போராட்டத்தைத்  திசை திருப்பவும் கர்நாடகாவை திருப்தி படுத்தவும்  ரஜினி நாடகம் போடுகிறார் என்று தமிமுன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்

மேலும் அவர் குறிப்பிடுகையில்,  ராணுவ கண்காட்சி திறப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக நாங்கள் கருப்புக் கொடி காட்டுவோம். அவர் ஹெலிகாப்டரில் வந்தாலும் தரையிறங்கத் தானே வேண்டும். தரை தளத்தில் சுற்றி கருப்புக் கொடி காட்டுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்

நாங்கள் போராட்டத்துக்கு செல்லும் போது எங்கள் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள்,  மக்களை அடிக்கத் தொடங்கினர். இதில் ஆத்திரமடைந்த இரண்டு பேர் காவலர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்,ஆனால் இதை புரிந்துக் கொள்ளாமல் ரஜினி கருத்து   வெளியிட்டுள்ளார். அதற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை ஆதரவு தெரிவித்துள்ளார். உண்மையில் ரஜினிகாந்த பேசியது அவருடைய குரல் அல்ல, அது பாஜகவின் குரல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS