பலாத்காரம் வழக்கு: நித்தியானந்தாவை விடுவிக்க முடியாது! -கர்நாடக நீதிமன்றம் அதிரடி!

India
Typography

பெங்களூரு, பிப்.20- பலாத்காரம் உள்ளிட்ட எந்த வழக்கில் இருந்தும் நித்தியானந்தாவை  விடுவிக்க முடியாது என கர்நாடக நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நித்தியானந்தவின் பிடதி ஆசிரமத்தில் அவருக்கு உதவியாளராக இருந்தவர் லெனின். நித்தியானந்தா ஆரத்திராவ் என்ற பெண்ணை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பலாத்காரம் நடந்ததாக தெரிவித்தார். இந்த வழக்கு கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில் தாம் 5 வயது தன்மையுடன் இருப்பதாகவும் தன்னை பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் நித்தியானந்தா மருத்துவச் சான்றுடன் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

பலாத்கார வழக்கு மட்டுமல்ல, இதர எந்த வழக்கில் இருந்தும் நித்தியானந்தாவை விடுவிக்க முடியாது எனக்கூறி நித்தியானந்தா உள்ளிட்ட 5 பேரின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நித்தியானந்தா மீதான வழக்குகளில் விசாரணை நடத்தப்படும் என்றும் ராம்நகர் நீதிமன்றம் தெரிவித்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS