காதலருடன் வீடியோ 'காலிங்' செய்தவாறு தற்கொலைப் புரிந்த எம்பிஏ மாணவி 

India
Typography

ஹைதராபாத், பிப். 20-  தனது காதலருடன்  வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டே   எம்பிஏ மாணவி ஒருவர் தற்கொலை புரிந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கோம்பலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ படித்துவந்த மாணவி ஹசீனா சவுத்ரி.

இவர் தனது க்காதலருடன் வீடியோ சாட்டிங் செய்து கொண்டிருக்கும்போதே தனது விடுதியில் உள்ள அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஹசீனா தூக்குப் போடுவதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து பதறிப்போன அந்தக் காதலர்,  அது குறித்து ஹாசீனாவின் தோழிகளிலிடம் தகவல் தெரிவித்து, அவரைக் காப்பாற்றுமாறு கதறினார். ஆனால் அவர்கள் சென்று கதவை திறப்ப தற்குள்ளாகவே ஹசீனா உயிரிழந்து விட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS