இந்தியப் பாரம்பரிய உடையில்  காந்தி ஆசிரமத்தில் கனடிய பிரதமர்!

India
Typography

அகமதாபாத், பிப்.20- இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுரூடே வும் அவருடைய குடும்பத்தினரும் இன்று குஜராத்திலுள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை புரிந்து மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

உலக காந்திய அமைதித் திட்டம் ஒன்றை இங்கு கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுரூடே தொடக்கி வைத்தார்.  கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்தக் கூட்டுத் திட்டம், மகாத்மாவின் அகிம்சை தத்துவங்களை மக்களுக்கு பரப்பும் நோக்கிலான இந்தத் திட்டமாக  செயல்படவிருக்கிறது.

ஆசிரமத்திற்கு வருகை புரிந்து, அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காந்தியின் அரிய பொருள்களை  கனடியப் பிரதமர் கண்டு கழித்தார்.

முற்றிலும் இந்தியப் பாரம்பரிய உடையில் கனடியப் பிரதமரின் ஒட்டுமொத்தக் குடும்பமும் காட்சிய அளித்ததானது  பலரைக் கவர்ந்தது. அவருக்கு ஆசிரமப் பொறுப்பாளர் காந்தியின் கைராட்டை ஒன்றினை நினைவுப் பரிசாக வழங்கினர். அதேவேளையில் அவருடைய பிள்ளைகளுக்கு காந்தியின் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. 

 

மேலும் இங்கு காந்தி நகரிலுள்ள  பிரசித்தி பெற்ற அக்‌ஷார்தாம் ஆலயத்திற்கு பிரதமர் ஜஸ்டின் டுரூடே தமபதியர் வருகை புரிந்த போது பாரம்பரிய  முறைப்படி அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு திலகமிடப்பட்ட வரவேற்கப்பட்டனர். 

இதே கோவிலுக்கு பிரதமர் ஜஸ்டின் டுரூடேவின் தந்தையும் முன்னாள் கனடியப் பிரதமருமான பியர்ரி டுரூடேவும் தாயார் மார்க்கிரெட்டும் வருகை புரிந்திருப்பது நினைவு கூறப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS