'சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு: கொலை மிரட்டல்!  குண்டர் தலைவன் கைது! 

India
Typography

கோலாலம்பூர், ஜன.9- ''உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்'' என்று ராஜஸ்தானைச் சேர்ந்த குண்டர் கும்பல் தலைவன் ஒருவன் விடுத்த  கடும் மிரட்டலைத் தொடர்ந்து பிரபல கோலிவுட் அதிரடி நாயகனான சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

ஜோத்பூரில் சல்மான் கானை தாம் கொல்லப் போவதாக லாரன்ஸ் பிஸ்னோய் என்ற அந்தக் குண்டர் தலைவன் கடந்த வாரம் மிரட்டல் விடுத்திருந்தான். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து,  சல்மான் கானுக்கு பாதுகாப்பு வழங்க அரசு உத்தரவிட்டது. 

பின்னர் அந்த நபரை போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்திய போது அங்கும் அவன், மீண்டும் அதே மிரட்டலை விடுத்தான். ''ஜோத்பூரில் சல்மான் கான் கொல்லப்படுவர். பிறகு தான் நாங்கள் யார் என்பது அவருக்குத் தெரியும். நான் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடி விடுவேன்" என்று பிஸ்னோய் நீதிமன்றத்தில் மிரட்டினான்.

பின்னர் உடனடியாக சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பை போலீசார் அமல்படுத்தினார். பிஸ்னோயின் மிரட்டலை போலீசார் கடுமையாகக் கருதுகின்றனர். மேலும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று போலீசார் சல்மான் கானுக்கு உறுதி அளித்துள்ளனர். பிஸ்னோயின் இந்தக் கொலை மிரட்டலுக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS