ஆசியாவின் கவர்ச்சிப் பெண் விருது; தீபிகாவை வீழ்த்தினார் பிரியங்கா!

India
Typography

 

மும்பை, டிசம்.7- ஆசியாவின் கவர்ச்சிப் பெண் என்ற விருதுத் தேர்வில்  இம்முறை பிரபல போலிவுட் நடிகை தீபிகா படுக்கோனை வீழ்த்தி அந்தப் பட்டத்தை தட்டிச் சென்று விட்டார் மற்றொரு போலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா.

தற்போது ஹாலிவுட் திரைப்படங்களைக் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா ஆசியாவின் கவர்ச்சிப் பெண் விருது தமக்கு கிடைத்திருப்பது குறித்து தம்முடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.

பிரிட்டனைச் சேர்ந்த 'ஈஸ்டர்ன் ஐ' என்ற வாரச் சஞ்சிகை ஆசியாவின் 50 கவர்ச்சிப் பெண்களைப் பட்டியலிடும் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இவ்வாண்டுக்கான பட்டியலை அது இன்று வெளியிட்டது.

தொலைக்காட்சி நடிகையான நியா சர்மா

பிரியாங்க சோப்ரா முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்பு ஏற்கெனவே ஐந்து முறை இந்த விருதினை அவர் தட்டிச் சென்றுள்ளார் என்ற போதிலும் கடந்த ஆண்டில் முதலிடத்தைப் பிடித்தது தீபிகா படுக்கோன் தான்.

இம்முறை தீபிகாவை முந்தி மீண்டும் முதலிடத்தைப் பிரியங்கா பிடித்திருக்கும் வேளையில், 2ஆவது இடத்தை ஒரு தொலைக்காட்சி நடிகையான நியா சர்மா கைப்பற்றி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

மூன்றாவது இடம் தீபிகாவுக்கும் நான்காவது ஆலியாவுக்கும் ஐந்தாவது இடம் பாகிஸ்தானிய நடிகையான மஹிரா கானுக்கும் கிடைத்தது.

பிரியங்காவுக்கு அடுத்த நிலையில் தீபிகாவை முந்தியிருப்பது குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக குறிப்பிட்ட நியா சர்மா, இந்த மகிழ்ச்சியை என் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னார். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS