வேலை இல்லாதவங்க தான்  அடுத்தவங்கள கலாய்க்கிறாங்க...! -நடிகை இஷா காட்டம்

India
Typography

மும்பை, அக்.16- வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் அடுத்தவர்களை 'கலாய்க்கிறார்கள்' என்று நடிகை இஷா குப்தா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை இஷா குப்தா கவர்ச்சியான, அரைகுறை ஆடைகளில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதை பார்த்த வலைதள வாசிகள் அவரை கலாய்த்தனர். 

இதையடுத்து இது குறித்து இஷா குப்தா கூறியிருப்பதாவது: 

வேலை எதுவும் இல்லாமல் இருப்பவர்கள் தான் அடுத்தவர்களை 'ஆன்-லைனில்' கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் ஆன்லைனில் நேரத்தை கழிக்கிறார்கள். ஆன்லைனில் வந்தால் பிரபலங்களை மட்டும் அல்ல யாராக இருந்தாலும் கிண்டல் செய்கிறார்கள், விமர்சிக்கிறார்கள். 

ஒன்னுமில்லாதவர்களின் கருத்தை மதித்தால் அது என் தவறாகிவிடும். கருத்தை தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. 

ஆனால் கலாய்ப்பவர்கள் எதை வேண்டுமானாலும் கலாய்ப்பார்கள். அவர்கள் உருப்படியாக ஏதாவது வேலை செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார் இஷா. 

BLOG COMMENTS POWERED BY DISQUS