வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கிருந்தே வாக்களிக்கப் புதிய சட்டம்! -சுஸ்மா சுவராஜ்

India
Typography

 அகமதாபாத், அக்.15- வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய இந்தியா வரத் தேவையில்லை. அவர்களுக்குப் பதிலாக அவர்களின் உறவினர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் விரைவில் வரவிருக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் வாக்களிக்க வேண்டுமானால், தற்போது தேர்தல் ஆணையத்திடம் முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், வாக்களிக்க இந்தியாவுக்கு அவர்கள் வரவேண்டும் என்பதான் இப்போதுள்ள நிலை. இதில் இருக்கும் சிக்கல்களைக் களையும் வண்ணம் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று அவர் சொன்னார்.

வாக்காளர்களாக இருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், தங்களின் வாக்குகளைத் தங்களுடைய உறவினர்கள் மூலம் பதிவு செய்யலாம். அதற்கான அத்தாட்சிக் கடிதத்தை அனுப்பி வைத்தாலேயே போதுமானது என்கிற அளவில் சட்டத் திருத்தம் வரவுள்ளது என அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS