காஞ்சிபுரம் கோயிலில் 'பிச்சை'- ரஷ்ய  இளைஞருக்கு உதவி! சுஷ்மா சுவராஜ் உறுதி

India
Typography

 புதுடில்லி, அக்.11- ஏடிஎம் கார்டு முடங்கியதால் பணம் இல்லாமல் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலில் 'பிச்சை' கேட்ட ரஷ்ய இளைஞருக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்யும் என்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார். 

ரஷ்யாவை சேர்ந்தவர் இவாஞ்சலின். இவர் தமிழகத்தைச் சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது மாமல்லபுரத்தைச் சுற்றி பார்த்த அவர் அங்கிருந்து குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு சென்றார்.

இதைத் தொடர்ந்து பணம் எடுப்பதற்காக அங்குள்ள ஏடிஎம் மையங்களில் அவர் கார்டை பயன்படுத்தியதில் அந்தக் கார்டு முடக்கப்பட்டது தெரியவந்தது. கையில் இருந்த பணம் காலியாகிவிட்ட நிலையில் சென்னை செல்வதற்காக கோயில் வாயிலில் நின்று பக்தர்களிடம் யாசகம் கேட்டார்.

தகவலறிந்த சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் இவாஞ்சலின் என்றும் தமிழகத்தை சுற்றி பார்க்க வந்த இடத்தில் ஏடிஎம் கார்டு முடக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு போலீஸார் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS