சாலையில் ஒரு பாசப்போராட்டம்: குட்டியைக்  காக்க நாயுடன் போராடிய தாய்க் குரங்கு!

India
Typography

 

புதுடில்லி, செப்.11- டில்லியில் நாயிடமிருந்து தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக தாய்க் குரங்கு சாலையில் கடுமையாக சண்டையிட்ட சம்பவம் என்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பரபரப்பான சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது குட்டிக் குரங்கு நபர் ஒருவரின் வண்டியில் சென்று மோதியுள்ளது. இதில், குட்டிக் குரங்குக்கு பெரிதாக அடிபடவில்லை என்றாலும், அது வண்டியில் அடிபட்டு விழுந்ததைத் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நாய், வேகமாக ஓடிவந்து குட்டி குரங்கினைத் தாக்க முயன்றது.

இதனைப் பார்த்த தாய்க் குரங்கு ஆவேசமடைந்து வேகமாக ஓடிவந்து நாயின் கழுத்தினை இறுகப் பற்றிக்கொண்டு சண்டையிட்டது. இந்த சண்டையில் தாக்குப்பிடிக்காமல் அந்த நாய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.

BLOG COMMENTS POWERED BY DISQUS