பீகாரில் வெள்ளம்: 120பேர் பலி! பாலம் இடிந்து தாயும் மகளும் அடித்து செல்லப்பட்ட திகில்-VIDEO 

India
Typography

பாட்னா, ஆக.19- பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையினால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை, தற்போது 120 ஆக உயர்ந்துள்ளது. பாலம் உடைந்து ஒரு தாயும் மகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Video source: Quint Extra

பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. மழை காரணமாக பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. 

மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள 15 மாவட்டங்கள் இருக்கும் 73 லட்சம் மக்க்கள் வெள்ளப் பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை, 120 ஆக அதிகரித்திருக்கிறது.  பல உடைந்த பாலத்தின் மேல் ஆபத்தான நிலையில், பலர் கடந்து சென்றனர்.

ஆகக் கடைசியாக ஒரு தாய், தனது மகள் மற்றும் மற்றொரு ஆணுடன் கடந்து சென்று கொண்டிருந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் பாலம்டீடிந்து தாயும், மகளும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சி மனதில் திகிலை ஏற்படுத்தியுள்ளது. ஆண் அதிர்ஷ்டவசமாக சாலையின் மறுபக்கம் விழுந்து உயிர் தப்பினார்.

அங்கிருந்தவர்களால் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உயிர்களையும் காப்பாற்ற முடியாமல் அதிர்ச்சியோடு நின்று வேடிக்கை பார்க்கின்றனர். இந்த காட்சியைத் தனது செல்போனில் ஒருவர் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS