சன்னி லியோனுக்காக திரண்ட கேரளா கூட்டம்! நாடே அதிருதில்லே..! -(VIDEO)

India
Typography

சென்னை, ஆக.18-  கேரளாவில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனைப் பார்க்கத் திரண்ட ரசிகர்கள் கூட்டத்தைக் கண்டு நாடே மிரண்டு விட்டது. இது தொடர்பில் ஆவேசத்துடன் டுவிட்டரில் வலைதளவாசிகள் கலாய்ப்பில் இறங்கியுள்ளனர்.

கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சன்னி லியோனின் கார், ரசிகர்கள் வெள்ளத்தில் சிறிய புள்ளிபோலத் தெரியும் அளவுக்கு கூட்டம் அலைமோதியது. 

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சன்னி லியோன், கேரளாவில் தனக்குக் கிடைத்த வரவேற்பு பிரமிக்க வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது கார் கொச்சி ரசிகர்களின் அன்புக் கடலில் மிதந்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தைப் பார்த்து வலைதளவாசிகள் பதிவிட்டுள்ள கருத்து என்னவென்றால், 'நல்ல வேலை சன்னி லியோன் தமிழ்நாட்டுக்கு வரல, ஓவியாவுக்கே ஆர்மி வச்சிருக்கரவனுங்க சன்னிக்கு என்னென்ன வச்சிருப்பானுங்கலோ...என்று கலாய்த்து டுவீட் செய்துள்ளார் ஒரு வலைதளவாசி. கேரளா கூட்டத்தைப் பார்த்தா, சன்னிலியோன் தான் 

அடுத்த கேரள முதல்வர் என்று சிலர் கூறியுள்ளனர்.   

தமிழில் சன்னி லியோனை வைத்து நடத்தலாம் என்று சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். சன்னி லியோனை வைத்து தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தினால் டிவியின் டி.ஆர்.பி எகிறிடும் என்று தங்களது ஆலோசனைகளைக் கூறியுள்ளார் சிலர்.

அதிக ரசிகர்கள் இருப்பதனாலேயே ஒரு நடிகர், முதல்வர் ஆக முடியும் என்றால், சன்னி லியோன் இந்தியாவின் பிரதமர் ஆகத் தகுதி உடையவர் தான் என்று நக்கலாகவும் பதிவிட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS