நிர்வாணப் படம்: அந்த விமர்சனம் முக்கியமா? போய் பொழைப்பைப் பாருங்க- நடிகை இஷா

India
Typography

மும்பை, ஆக.18- 'என்னை வெறுக்கும் அனைவருக்கும் நன்றி... வமர்சித்தது போதும்...,போய் உங்க பொழைப்பைப் பாருங்க' என்று வலை தளவாசிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் பாலிவுட் நடிகை இஷா குப்தா, இவர் தனது நிர்வாணப் புகைப்படங்களை இருட தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இதைப் பார்த்த வலைதளவாசிகள் இஷா குப்தாவை கடுமையாக விமர்சித்தனர். இது குறித்து இஷா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது கூறியிருப்பதாவது;

நான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட எனது புகைப்படங்களை 'லைக்' செய்தவர்கள் சிலர் தான். ஆனால் அவற்றை கிண்டல் செய்தவர்கள் பலர். எது புதிதாக வந்தாலும் அதை விமர்சிப்பவர்களே அதிகம்.

அனைவருக்கும் கருத்து உள்ளது, கையில் 'ஆண்ட்ராய்டு போன்' உள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்படி பயன்படுத்துவது என்பது  தெரிந்துள்ளது. தனியாக தங்களுக்கென வாழ்க்கை இல்லாதவர்கள் தான், அடுத்தவர்களைப் பற்றி அதிகம் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். என்னை அதிகம் கிண்டல் செய்தவர்களும் அப்படியே...

மறக்கப்படுவதை விட வெறுக்கப்டுவது நல்லது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். என்னை தேசிய செய்தியாக்கிய என்னை வெறுக்கும் அனைவருக்கும் நன்றி. நாட்டில் எவ்வளவோ விஷயம் இருக்க, நீங்கள் என்னைப் பற்றியே விவாதிக்கிறீர்கள். போய் உங்க பொழப்பை பாருங்கள்..,ஐ லவ் யூ.. என்று இஷா தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS