விநாயகரையும் விடவில்லை ஜிஎஸ்டி!

India
Typography

மும்பை, ஆக.7– இந்தியாவில் விநாயகர் சதுர்த்திக்காக விற்பனைக்கு வந்துள்ள சிலைகள், இந்த ஆண்டில் கிடுகிடுவென விலையுயர்வு கண்டன, காரணம் ஜிஎஸ்டிதான்.. என்று சிலைத் தயாரிப்பாளர்கள் வேதனையுடன் கூறினர்.

நாடு முழுவதும் எதிர்வரும் 25ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட பிள்ளையார் சிலைகளை வைத்து வணங்கி பூஜை செய்து அவற்றை நீர் நிலைகளில் கரைப்பார்கள். 

வட மாநிலங்களில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சிலையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

விலை உயர்வுக்கானக் காரணம் பற்றி தயாரிப்பாளர்கள் கூறியதாவது: விநாயகர் சிலையை உருவாக்க பயன்படும் 'பிளாஸ்டர்' மாவு மீது வரி கடந்த ஆண்டு 13.5 விழுக்காடாக இருந்தது. ஆனால், ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி அறிமுகத்திற்குப் பிறகு 18 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.  

விநாயகர் சிலைக்கு வண்ணம் பூசத் தேவைப்படும் சாயம் மற்றும் 'வார்னிஷ்' மீது கடந்த ஆண்டு 13.5 விழுக்காடாக இருந்த வரி, தற்போது அது 28 விழுக்காடாக ஆக அதிகரித்துள்ளது. 

சிலையை அலங்கரிக்கத் தேவைப்படும் கிரீடம் உள்ளிட்ட அலங்கார பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக விநாயகர் சிலையின் விலையும் ஏகத்திற்கு அதிகரித்து இருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS