மலேசியச் சிறைகளில் கைதிகளாக 340 இந்திய பிரஜைகள்!

India
Typography

புதுடில்லி, ஜூலை 21- சுமார் 340க்கும் மேற்பட்ட இந்திய பிரஜைகள் பல வகையான குற்றங்களுக்காக மலேசியச் சிறைச்சாலைகளில் இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 7 ஆயிரத்து 448 இந்திய பிரஜைகள், 81 நாடுகளில் சிறைக் கைதிகளாக இருந்து வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சு நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது.

சவுதி அரேபியாவில் 2 ஆயிரத்து 46 இந்திய கைதிகளும், ஐக்கிய அரபு சிற்றரசில் ஆயிரத்து 376 பேரும், குவைத்தில் 506 பேரும், மலேசியாவில் 304 பேரும், சிங்கப்பூரில் 133 பேரும் உள்ளனர் அமைச்சு கூறியது.

உள்நாட்டு சட்ட விதிகளின் கட்டுப்பாடு காரணமாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய சிறைகளில் இருக்கும் கைதிகளின் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டதாக இந்திய அரசாங்கம் கூறியது.

BLOG COMMENTS POWERED BY DISQUS