பாவனா கடத்தல்: காவ்யா மாதவனிடம் போலீசார் தீவிர விசாரணை

India
Typography

திருவனந்தபுரம், ஜூலை.17- பிரபல நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் 3 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

நடிகை கடத்தல் வழக்கில் திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் 2 ஆதாரங்கள் போலீசாரிடம் உள்ளனஎன்று கூறப்பட்டது.

இதைத் தெரிந்து கொண்ட காவ்யா, திலீப் கைதுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பே தனது தாயாருடன் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார். அவர்கள் இருவரையும்  போலீசார் ரகசியமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர்கள் இருக்கும் இடத்தை போலிசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இருவரையும் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில் கைது செய்ய நேரிடும் எனப் போலீசார் தகவல் அனுப்பினர் அதன்படி காவ்யா மாதவன் தனது தாயார் சியாமளாவுடன் போலீசார் கூறிய இரகசிய இடத்திற்கு சென்றார்.

தொடர்ந்து போலீசார் 2 பேரிடமும் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். டிஜிபி லோக்நாத் பெகராவும் வீடியோ 'கான்பிரன்சிங்' மூலம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் சில முக்கிய தகவல்களை கூறியதாக தெரிகிறது.

நடிகையை கடத்திய முக்கிய குற்றவாளியான 'பல்சர்' சனிதான் காவ்யா மாதவனுக்கு எதிரான ஆதாரங்களைப் போலீசாருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காவ்யா மாதவன் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS