ஆபாசப்பட இணையத் தளங்களை  அதிரடியாக முடக்கியது இந்தியா!

India
Typography

புதுடில்லி, ஜூலை.15- இந்தியாவில் 13,500 ஆபாசப்பட இணையதளங்களை அதிரடியாக முடக்கியுள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும் கடந்த மாதத்தில் மட்டும் 3,500 சிறார்கள் சார்ந்த ஆபாசப்பட இணையத் தளங்களை முடக்கியுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்கள் ஆபாசப் படங்களை பார்த்துக் கெட்டுப்போவதாக தொடரப்பட்ட பொது நல வழக்கு நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பள்ளிகளில் குழந்தைகள் ஆபாசத் தளங்கள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் 'ஜாம்மர்' கருவிகளைப் பொருத்துமாறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்த பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நீதிபதிகள், ஆபாசத் தளத்தின் பயன்பாட்டை தடுக்க, பள்ளிகள் 'ஜாம்மர்' கருவிகளைப் பொருத்த முடியுமா? நாடுமுழுவதும் அரசுதான் அதை செய்ய வேண்டும் என நீதிபதி கூறினார். 

அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞ்ர், நாடு முழுவதும் கடந்த மாதத்தில் மட்டும் 13,500 ‘குழந்தைகள் சார்ந்த ஆபாச இணைய தளங்கள்’ முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து மேலும், பள்ளி குழந்தைகள், ஆபாசத் தளங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தொடர்பான அறிக்கையை இரண்டு நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என நீதிபதி கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS