மாந்திரீகம்: விளம்பரத் தந்திரங்களில் ஏமாறாதீர்கள்! -திலீபன் நாராயணன் நம்பூதிரி-(VIDEO) 

ஆன்மீகம்
Typography

லாலம்பூர், ஜன.10- மலேசியர்கள் பூஜை புனஸ்காரங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருந்த போதிலும், மாந்திரீகங்கள் தொடர்பான போலி விளம்பரங்களில் பணத்தை இழக்கவும் பலரிடம் அவர்கள் ஏமாறுகின்றனர் எனத் தாம் கருதுவதாக கூறுகிறார் கேரளா வைச் சேர்ந்த பிரபலமான வேத ஆகம விற்பன்னர் திலீபன் நாராயணன் நம்பூதிரி. 

கடவுள்  எழுதிய விதியை மாற்ற வல்லவர் யாருமில்லை. நமது பாதையும் பயணமும் எத்தகையதாக இருக்கும் என்பதைக் கண்டறிந்து கொள்ள நமக்கு வழிகாட்டியாக இருப்பது நமது தொன்மைய ஜாதக ஜோதிடக் கலை. விதியை முற்றாக மாற்றிவிட முடியாது என்றாலும் வாழ்க்கையில் வரும் தடங்கல்களைத் தவிர்க்க முடியும் திலீபன் நாராயணன் நம்பூதிரி. குறிப்பிட்டார். 

மலேசியாவுக்கு குறுகியகால வருகை மேற்கொண்டிருக்கும் தீபன் நாராயணன், கேரளா மண்ணில் வேத மந்திரப் பூஜைகளில் பாரம்பரியமிக்க எம்.நாராயணன் நம்பூதிரியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

வேத மந்திரப் பூஜைகளைச் சின்ன வயதிலிருந்த தன்னுடைய தாத்தாவிடமிருந்து தாம் கற்றறிந்து கொண்டதாக வர்த்தக நிர்வாகத்துறை பட்டதாரியான திலீபன் தெரிவித்தார். 

நம்முடைய வாழ்க்கை எப்படி அமையும் என்பதை ஜாதகம் குறிப்பிட்டுச் சொல்கிறது. ஒருவருக்குத் தீங்கு தரக்கூடிய பல அம்சங்கள் உள்ளன. அதனை அறிந்து கொண்டால், அந்தத் தடங்கல்களை விட்டு விலகி நிற்க வழி உருவாகும். நமக்கு விதிக்கப்பட்ட எதையும் மாற்ற முடியாது. என்னென்ன வழிகளில் நமக்கு துன்பங்கள், தொல்லைகள் வரும் என்பதை அறிந்து செயல்பட்டால் பாதிப்புக்களைத் தணிக்கமுடியும் என்று அவர் விளக்கினார்.

குறிப்பாக தோஷங்கள் என்று சொல்வார்கள் அதில் பல விதங்கள் உண்டு. சத்ரு தோஷம், ஜாதக தோஷம், பித்ரு (முன்னோர் சாபம்) தோஷம் என்று பலவித குறுக்கீடுகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உண்டு என்றார் அவர்.

ஜாதகங்களை ஆராய்ந்தால் இவற்றைக் கண்டுபிடித்து விடலாம். 'முத்து' பாட்டுப்  போட்டுப் பார்ப்போம். தோஷத் தடங்கல் இருக்குமேயானால் சடங்குப் பூர்வமான பூஜைகள், வழிபாடுகள் மூலம் பலவற்றை நிவர்த்தி செய்வோம். 

கிரக நிலைப்பாடு காரணமாக, எதிர்மறைவான விளைவுகள் பலருக்கு ஏற்படுவது உண்டு. அதனைக் கொஞ்சம் மாற்றலாம். ஆனால், ஒட்டு மொத்தமாகவே மாற்றி விடமுடியும் என்று சொன்னால் அத்தகையோரிடம் மக்கள் ஏமாந்து விடக்கூடாது. அத்தையவர்களின் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று திலீபன் நாராயணன் வலியுறுத்தினார்.

தனக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்தை அல்லது நோயைத் தணிக்க ஒருவர் மாந்திரீகத்தை நாடலாம். மற்றவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தவும் நோயை உண்டாக்கவும் மந்திரீகத்தை நாடக்கூடாது. அத்தகைய தீய விளைவுகளைத் தரும் நோக்கில் செயல்படமுனையும் போதுதான் பணத்தாசை பிடித்த மாந்திரீகர்களிடம் சிக்கி இழப்புக்களையும் ஏமாற்றங்களையும் மக்கள் சந்திக்க நேர்கிறது.

நல்ல சக்திகள் நம்மிடையே இருப்பது போலவே தீய சக்திகளும் உள்ளன. எதிர்மறை வினைகள் குறையும் போதுதான் ஒருவரை தீய சக்திகள் பற்றுகின்றன. எனவே, நேர்மறை வினை ஆற்றுங்கள். நிறைய புண்ணியங்களைத் தேடுங்கள். அத்தகைய புண்ணிய சக்திகள் உங்களிடம் நிறைந்து வழியும் போது எந்தத் தீய சக்தியும் அண்டாது என்று அவர் அறிவுறுத்தினார்.   

நேர்மறை வினைகள் ஆற்றுவது எப்படி தெரியுமா? நிறைவான வழிபாடுகள், பூஜைகள், கோயில் வழிபாடுகளைத் தவறாமல் கடைபிடித்தல் ஆகியவையே நல்ல அதிர்வுகளை உங்களுக்குள் நிரப்பும். பூஜை மந்திரங்களை ஓதுங்கள். வீடுகளில் பூஜைசெய்வது முக்கியம். கோயில்க ளுக்குச் செல்லுங்கள் சில கோயில்களில் நல்ல அதிர்வுகள் கிட்டும். அவை உங்களுக்குள் நிரம்பும் போது உங்களை தோஷங்கள் பாதிக்காது. அதன் பாதிப்புகள் தணியும்.

சிலர் மீது கெட்ட ஏவல்கள் ஏவப்படும் போது, அவர்களிடம் ஏற்கெனவே நேர்மறை வினைகள் குறைவாக இருந்தால், ஏவல்களால் பாதிப்பு வருகிறது. ஒரு நம்பூதிரி என்ற முறையில் கெட்ட ஏவல்களின் பாதிப்பு இருப்பவர்களுக்கு மாந்திரீகம், பூஜைகள், சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் மூலம் நிவர்த்திப்பதையே எங்கள் குடும்பம் பரம்பரையாக செய்து வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

பொதுவாக, பூஜைகள் முறையாக இல்லங்களில் நடந்து வருமேயானால், அதுவே தீய ஏவல்களைத் தடுத்து நிறுத்தும். அதுமட்டுமின்றி, அவரவர்களுக்கென குடும்பப் பாரம்பரிய பூஜைகள், வழிபாடுகள் இருக்கும். அவற்றை நிறைவாகப் பின்பற்றினால் அதனை நமது பிள்ளை களும் பின்பற்றி நல்லதொரு எதிர்காலத்தை அடைய முடியும் என்று திலீபன் நாராயண நம்பூதிரி விளக்கினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS